/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரி பட்டமளிப்பு விழா

ADDED : அக் 27, 2024 03:43 AM

கீழக்கரை : கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லுாரியில் 32-வது பட்டமளிப்பு விழா நடந்தது.
தாளாளர் டாக்டர் ரஹ்மத்துன்னிஷா தலைமை வகித்தார். செயலாளர் ஹாலித் ஏ.கே.புகாரி பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். முதல்வர் எஸ்.சுமையா வரவேற்று ஆண்டறிக்கை வாசித்தார். சென்னை வண்டலுார் பி.எஸ்.அப்துல் ரகுமான் கிரெஸண்ட் பல்கலை துணை வேந்தர் முருகேசன் மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார்.
கடந்த 2022ம் ஆண்டில் பயின்ற மாணவிகளுக்கு இளநிலை பிரிவில் 477, முதுநிலைப்பிரிவில் 53 மற்றும் பி.எச்.டி., பிரிவில் -2 மற்றும் 2023ம் ஆண்டில் பயின்ற மாணவிகள் இளநிலை பிரிவில் 423, முதல் பிரிவில் 109 என 1058 மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
கல்லூரியின் தேர்வு நெறியாளர் முத்து மாரீஸ்வரி, கலைப்புல முதன்மையர் ஜாஸ்மின், மாணவர் செயல்பாட்டு முதன்மையாளர் லட்சுமி ரிஷி மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை பொது மேலாளர் சேக் தாவுத் கான் மற்றும் உள்துறை உத்திரவாதக் குழுவினர் செய்திருந்தனர்.