நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் குமரய்யா கோயில் அருகே தனியார் மண்டபத்தில் தமிழ்புலிகள் கட்சி மாவட்டக்குழு கூட்டம் நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் ரஞ்சித் தலைமை வகித்தார். மாநில தலைவர் திருவள்ளுவன், மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா முன்னிலை வகித்தனர். மார்ச் 10ல் மாநில மாநாட்டில் ஏராளமானோர் பங்கேற்க முடிவு செய்தனர். கட்சியின் மாநில தலைமை செயலாளர் செல்வம், இளம்புலிகள் அணி மாநிலச் செயலாளர் கலைவேந்தன் பங்கேற்றனர்.