இலவசங்களை பெறும் போது விலைவாசி உயரச் செய்யும்: மதுரை ஆதீனம் கருத்து
இலவசங்களை பெறும் போது விலைவாசி உயரச் செய்யும்: மதுரை ஆதீனம் கருத்து
UPDATED : அக் 30, 2026 05:12 PM
ADDED : அக் 30, 2026 05:07 PM
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் ஜெயந்தி விழாவையொட்டி மதுரை ஆதீனம் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
பின் அவர் கூறியதாவது :
முத்துராமலிங்கத்தேவர் மதுரை ஆதீனத்தின் சீடராக இருந்தவர். மதுரை ஆதீனத்தின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார். என்றும் தன் நினைவிடத்திற்கு மதுரை ஆதீனத்தின் பிரசாதம் வரவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அவரது நினைவாலயத்திற்கு பிரசாதம் கொண்டு வரப்பட்டது. தேசியத்தையும் தெய்வீகத்தையும் அவர் இரு கண்களாக போற்றி வாழ்ந்தார்.
வீரமும் தீரமும் நிறைந்தவராகவும், சிறந்த குணநலன்களை கொண்டவராகவும் அவர் திகழ்ந்தார். த.வெ.க., ஆட்சி சிறப்பாக நடக்கிறது. மறைந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் வரலாறுகளை பாடப் புத்தகங்களில் இடம் பெற செய்ய வேண்டும் என முதல்வர் விஜய்க்கு கோரிக்கை விடுக்கிறேன். மக்கள் இலவச பொருட்களை பெறும் போது விலைவாசி உயரத்தான் செய்யும் என்றார்.
