/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழை வெள்ளம் சூழ்ந்த கஜினி நகர்; அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
/
மழை வெள்ளம் சூழ்ந்த கஜினி நகர்; அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
மழை வெள்ளம் சூழ்ந்த கஜினி நகர்; அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
மழை வெள்ளம் சூழ்ந்த கஜினி நகர்; அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
ADDED : நவ 23, 2024 06:44 AM

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஊராட்சி கஜினி நகரில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழை நீரை அகற்ற வலுயுறுத்தி அப்பகுதி மக்கள் தண்ணீரில் இறங்கி கோஷமிட்டனர்.
கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் ராமநாதபுரம் நகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சக்கரக்கோட்டை ஊராட்சி கஜினி நகரில் நுாறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வடிகால் வசதியின்றி இடுப்பளவு மழைநீர் சூழ்ந்துள்ளது. வெளியே வந்து செல்ல முடியாமல் 3 நாட்களாக மக்கள் தவிக்கின்றனர்.
பால்காரர், நாளிதழ், சிலிண்டர் விநியோகம் செய்பவர்கள் வருவதே இல்லை. சக்கரக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்தில் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி மக்கள் கோஷமிட்டனர். உடனடியாக மழைநீரை அகற்ற கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.