/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கானா பாடகி இசைவாணி இயக்குனர் ரஞ்சித் மீது புகார்
/
கானா பாடகி இசைவாணி இயக்குனர் ரஞ்சித் மீது புகார்
ADDED : நவ 30, 2024 06:41 AM
சாயல்குடி; ஐயப்ப பக்தர்களின் பக்தி உணர்வை காயப்படுத்திய கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாயல்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டது.
அகில பாரத ஹிந்து மகாசபை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.ஆர்.குமரேசன் கூறியதாவது:
சினிமா இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் கலாசார மையம் சார்பில் நடத்தப்பட்ட மார்கழி மக்கள் இசை என்ற இசை நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி ஒட்டுமொத்த ஐயப்ப பக்தர்கள் மற்றும் ஹிந்து மக்களின் மனதை புண்படுத்தி பாடல் பாடியுள்ளார்.
எனவே பொதுமக்களின் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாயல்குடி போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்துள்ளேன் என்றார்.