ADDED : மார் 17, 2026 02:28 AM

அ நிறம் | அளவு
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் சேராங்கோட்டை கடற்கரையில் நேற்று 5 அடி நீளம், 60 கிலோ எடையுள்ள டால்பின் அழுகிய நிலையில் கரை ஒதுங்கியது. இதை வனத்துறையினர் மீட்டு கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை செய்து கடற்கரையில் புதைத்தனர்.
ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் சிலர் தடை செய்த இரட்டை மடியில் மீன் பிடிப்பதால் அதில் சிக்கி டால்பின் உயிரிழந்திருக்க கூடும். இது கரை ஒதுங்கி 2 நாட்கள் ஆனதால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
