/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ராட்சத குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
/
ராட்சத குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
PUBLISHED ON : நவ 19, 2025 07:20 AM
கமுதி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக கமுதி--முதுகுளத்துார் ரோடு பேரையூர் கண்மாய்கரை அருகே ராட்சத குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை அதிகாரிகள் சரி செய்தனர்.
முதுகுளத்துார் அருகே கீழக்காஞ்சிரங்குளம் குடிநீரேற்று நிலையத்தில் இருந்து ரோட்டோரத்தில் குழாய் அமைக்கப்பட்டு கருங்குளம், பேரையூர்,பாக்குவெட்டி, மருதங்கநல்லுார் உள்ளிட்ட கிராமங்களுக்கு காவிரி குடிநீர் தரப்படுகிறது. முதுகுளத்துார் கமுதி ரோடு பேரையூர் கண்மாய் கரை அருகே வரத்து கால்வாய் வழியாக ராட்சத குழாய் அமைக்கப்பட்டு காவிரி குடிநீர் செல்கிறது. இந்தகுழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிறது. இதனால் கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ராட்சத குழாய் உடைப்பை சரி செய்தனர்.

