ADDED : மார் 31, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலத்தில், தேசிய பசுமைப்படை மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விதமாக, துணி பைகளை வழங்கி நிர்வாகிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் தலைமை வகித்தார். செங்குடி மிக்கேல் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு துணி பை வழங்கினர். மக்கள் அதிகம் கூடும் வாரச்சந்தை உள்ளிட்ட பகுதியில் துணிப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.