/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நத்தம் கிராம கணக்கு நிலஅளவைகள் கணினி பதிவேற்றத்தில் குளறுபடி: பிழைகளை திருத்த வி.ஏ.ஓ.,க்கள் வலியுறுத்தல்

ADDED : மார் 19, 2024 10:41 PM
திருவாடானை : நத்தம் கிராம கணக்குகள் நில அளவை துறையின் கீழ் கணினியில் பதிவேற்றம் செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகள் உள்ளன. ரத்து செய்த பட்டாக்கள் திரும்பவும் பழைய பெயரில் உள்ளது. இப்பிழைகளால் மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். தாலுகாவாரியாக சரி செய்ய வி.ஏ.ஓ.,க்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட வி.ஏ.ஓ., சங்க மாவட்ட தலைவர் நம்புராஜேஸ் கூறியதாவது: நத்தம் கிராம கணக்குகள் நில அளவைத் துறையின் மூலம் அனைத்து தாலுகாக்களிலும் (முதுகுளத்துார் நீங்கலாக) பயன்பாட்டிற்கு தமிழ் நிலம் என்னும் வலைதளத்திலும், மக்கள் பயன்பாட்டிற்கு இணையதளத்திலும் வெளியிடப்பட்டது. இணையவழி தமிழ்நில தளத்தில் பல குளறுபடிகள் உள்ளன. பட்டாதாரர்கள் பெயர்கள் பிழையாக உள்ளன.
2023ம் ஆண்டில் முழுப்புலம் மற்றும் உட்பிரிவு இனங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளன. சில வருவாய் கிராமங்களில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கிய இனங்கள் அனைத்தும் தற்பொழுது வரை புறம்போக்கு நிலங்களாகவே உள்ளன. விஸ்தீரனங்கள் பிழையாக உள்ளது. புல எண்கள் விடுபட்டுள்ளது. பட்டா நிலங்கள் சர்க்கார் புறம்போக்கு நிலங்களாக உள்ளது. சம்பந்தமே இல்லாத பெயரில் பட்டாக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலங்களின் விஸ்தீரணத்தில் 0.0000.5 ச.மீ. அளவுகள் பதிவாகவில்லை.
அரசு புறம்போக்கு நிலங்கள் தெரு, பாதை, சந்து போன்றவை குறிப்பு கலங்களில் விடுபட்டுள்ளது. ரத்து செய்யப்பட்டா பட்டாக்கள் திரும்பவும் பழைய பெயரில் உள்ளது. இப் பிழைகளால் பொதுமக்கள் பாதிக்கபட்டுள்ளனர். ஆகவே சம்பந்தபட்ட தாலுகாக்களில் தாசில்தார், துணை தாசில்தார் மூலமாக நத்தம் தமிழ்நில தளத்தை கணினியில் பதிவு செய்து, திருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.