ADDED : மே 26, 2025 09:34 PM

அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கீழ்ப்பனையூர் விநாயகர், மாரியம்மன், ஊர்க்காவல் உடைய அய்யனார் கோயில் விழாவை முன்னிட்டு கிடாய் வெட்டு விழா நடந்தது.
முன்னதாக மூலவர்களுக்கு 18 வகை அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அசைவ விருந்து வழங்கப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை கீழ்ப்பனையூர் கிராமத்தினர் செய்தனர்.
