ADDED : செப் 16, 2026 03:02 PM
அ நிறம் | அளவு
தொண்டி: தொண்டி அருகே கொடிப்பங்கு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி 34.
இவரது ஆடுகளை மேய்ச்சலுக்கு பின் வீட்ருகே கட்டியிருந்தார். அப்போது தொண்டி அருகே நம்புதாளையை சேர்ந்த வீரமணி 23, வெற்றிவேல் 29, ஆகியோர் டூவீலரில் சத்தமில்லாமல் சென்று ஒரு ஆட்டை துாக்கி சென்றனர். திருடிய ஆட்டை முப்பையூர் சந்தையில் விற்க முயன்றனர். திருவாடானை குற்றப்பிரிவு போலீசார் அங்கு இருவரையும் கைது செய்தனர். ஆட்டையும் கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.
