/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நரிப்பையூரில் கழிச்சல் நோயால் ஆடுகள் பலி
/
நரிப்பையூரில் கழிச்சல் நோயால் ஆடுகள் பலி
ADDED : பிப் 16, 2025 07:11 AM
சாயல்குடி, : சாயல்குடி அருகே நரிப்பையூர் ஊராட்சி பகுதிகளில் ஏராளமானோர் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளை வளர்க்கின்றனர். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இப்பகுதியில் ஆடுகளுக்கு கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நுாறுக்கு மேற்பட்ட ஆடுகளுக்கு கழிச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆடு வளர்ப்போர் தவிக்கின்றனர். நரிப்பையூர் ஊராட்சி காமராஜர்புரத்தைச் சேர்ந்த விவசாயி தங்கபாண்டியன் கூறியதாவது:
கழிச்சல் நோய் பாதிப்பால் என்னிடம் இருந்த இரண்டு வெள்ளாடுகள் இறந்து விட்டன.
மேலும் இரண்டு வெள்ளாடுகள் நோயின் பாதிப்பால் கவலைக்கிடமாக உள்ளன.
இதே போன்று மற்ற விவசாயிகளின் ஆடுகளும் கழிச்சல் நோய் பாதிப்பில் உள்ளன.
எனவே சாயல்குடி கால்நடைத்துறை டாக்டர்கள் உரிய முறையில் ஆய்வு செய்து அதற்கான மருத்துவ வசதியை ஏற்படுத்த வேண்டும்.
மாவட்ட நிர்வாகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட கால்நடை ஆம்புலன்ஸ் இப்பகுதியில் அதற்கான சேவையை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

