ADDED : நவ 03, 2024 04:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி கேதார கவுரி அம்மன் கோயில் கவுரி நோன்பு விழாவில் கோலாட்ட திருக்கோலத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
பரமக்குடி கேதார கவுரீஸ்வரி அம்பிகை கோயிலில் ஐப்பசி மாத கவுரி நோன்பு விழா நடக்கிறது.
இரண்டாம் நாள் விழாவில் அம்மன் நேற்று கோலாட்டம் ஆடும் திருக்கோலத்தில் எழுந்தருளினார். அப்போது சிறுமியர், பெண்கள் கோலாட்டம் ஆடியும், கும்மி அடித்தும் அம்மனை தரிசித்தனர். நேற்று இரவு ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்தார்.