ADDED : பிப் 09, 2025 04:55 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் நகராட்சியுடன் தங்கச்சிமடம் ஊராட்சியை இணைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சமீபத்தில் ராமேஸ்வரம் நகராட்சியை விரிவாக்கம் செய்து அதில் தங்கச்சிமடம் ஊராட்சியை இணைக்கவும், இதுகுறித்து மக்கள் கருத்து கேட்க தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த கருத்து கேட்பு கூட்டம் நேற்று தங்கச்சிமடத்தில், மண்டபம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஜெயமுருகன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் தற்போதைய ராமேஸ்வரம் நகராட்சியுடன் தங்கச்சிமடம் ஊராட்சியை இணைக்கலாமா அல்லது தங்கச்சிமடத்தை பேரூராட்சியாக தரம் உயர்த்தலாமா என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர்.இதற்கு கிராம மக்கள், மீனவர்கள் அதிகம் வசிக்கும் இந்த ஊராட்சியை ராமேஸ்வரம் நகராட்சியுடன் இணைக்கவோ, பேரூராட்சியாக தரம் உயர்த்தவோ கூடாது. இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. சிரமம் தான் ஏற்படும். எனவே தங்கச்சிமடம் ஊராட்சியாகவே செயல்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
இதில் மீனவர் சங்க தலைவர் சேசு, தங்கச்சிமடம் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், கிராம மக்கள் பங்கேற்றனர்.

