/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
110 ஆண்டுகளான தனுஷ்கோடி கோயில், சர்ச் அழிவிலிருந்து காக்க அரசு நடவடிக்கை தேவை

ADDED : டிச 03, 2024 05:26 AM

தனுஷ்கோடி முதல் இலங்கை தலைமன்னார்வரை 1914ல் பயணிகள்கப்பல் போக்குவரத்து துவங்கியது. 1964ல் தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலில் துறைமுகம், சர்ச், விநாயகர்கோயில், தங்கும் விடுதிகள், ரயில்வே ஸ்டேஷன் இடிந்து சின்னாபின்னமாகியது. அன்று முதல் தனுஷ்கோடிக்கு ரயில், கப்பல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
அதன் பின் 1914 முதல் 1964 வரை தனுஷ்கோடி வணிக நகராமாகவும், புனித தலமாகவும் விளங்கியது. இதனால் ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடி முக்கிய நகரமாக இருந்தது.
53 ஆண்டுகளுக்குப் பின் பிரதமர் மோடி உத்தரவில் 2017ல் ராமேஸ்வரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தேசிய நெடுஞ்சாலை அமைத்தனர். அன்று முதல் ஓராண்டில் 2 கோடி சுற்றுலா பயணிகள், பக்தர்கள் தனுஷ்கோடி வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் புயலில் உருக்குலைந்து இன்றும் கம்பீரமாக சர்ச், விநாயகர்கோயில் வரலாற்றின் அரிச்சுவடாக உள்ளது. இதனை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் கண்டு ரசித்து செல்லும் நிலையில் 110 வயதை கடந்த கோயில், சர்ச் சூறாவளிக் காற்று வீசி கனமழை பெய்தால் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
இதனால் தனுஷ்கோடியின் அடையாளமும் அழிந்து போகும் அவல நிலை உள்ளது. எனவே சர்ச், விநாயகர் கோயிலை புதுப்பித்து சுற்றுலாவை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.