/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
டூவீலர் மீது மோதிய அரசு பஸ்; 5 மாதக் குழந்தை, பாட்டி பலி
/
டூவீலர் மீது மோதிய அரசு பஸ்; 5 மாதக் குழந்தை, பாட்டி பலி
டூவீலர் மீது மோதிய அரசு பஸ்; 5 மாதக் குழந்தை, பாட்டி பலி
டூவீலர் மீது மோதிய அரசு பஸ்; 5 மாதக் குழந்தை, பாட்டி பலி
ADDED : ஜன 28, 2025 12:37 AM

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே முதுகுளத்துார் ரோட்டில் சென்ற டூவீலர் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 5 மாதக் கைக்குழந்தை, பாட்டி பலியாயினர்.
பரமக்குடி அருகே புழுதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் முருகன், மனைவி சத்யா 19. இவர்களது 5 மாதக் கைக்குழந்தையான ருத்ரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சத்யா, அவரது அம்மா செல்வி 55, உடன் பரமக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பொங்கலுக்கு வாங்கிய புதிய டூவீலரில் சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.
முதுகுளத்துார் ரோடு திருசண்முகநாதபுரம் விலக்கில் சென்ற போது பின்னால் வந்த அரசு பஸ்சுக்கு வழி விட ரோட்டோரமாக நின்றுள்ளார். அப்போது அரசு பஸ் டூவீலர் மீது வேகமாக மோதியதில் துாக்கி வீசப்பட்ட ருத்ரன் மீது பஸ் டயர் ஏறி சம்பவ இடத்தில் நசுங்கி பலியானார்.
தாயும், மகளும் ரோட்டோரம் துாக்கி வீசப்பட்டனர். படுகாயம் அடைந்தவர்கள் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் செல்வி பலியானார். அரசு பஸ் டிரைவர் கீரனுார் கதிரேசனை எமனேஸ்வரம் போலீசார் கைது செய்தனர்.