ADDED : செப் 15, 2026 07:45 PM
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஒப்பிலானில் இருந்து முதுகுளத்துார் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துார் அரசு போக்குவரத்து பணிமனை ஒப்பிலானில் இருந்து முதுகுளத்துார் வழியாக சென்னைக்கு பஸ் இயக்கப்பட்டது. இதில் சாயல்குடி, கடலாடி, முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கல்லுாரி மாணவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பலர் தினந்தோறும் சென்னைக்கு செல்வதற்கு உதவியாக இருந்தது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பிலானில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ் நிறுத்தப்பட்டது. தற்போது முதுகுளத்துாரில் இருந்து எந்த அரசு பஸ்சும் சென்னைக்கு இயக்கப்படாததால் கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், வியாபாரிகள் மூன்று மடங்கு பணம் கூடுதல் செலவு செய்து தனியார் பஸ்சில் சென்னை செல்லும் நிலை உள்ளது.
இதனால் பொதுமக்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. முதுகுளத்துார் பணிமனையில் இருந்த சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பஸ்சை மீண்டும் இயக்க போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வர்த்தகர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
