/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அடையாள அட்டை வழங்க அரசு பஸ் டைம் கீப்பர்கள் கோரிக்கை
/
அடையாள அட்டை வழங்க அரசு பஸ் டைம் கீப்பர்கள் கோரிக்கை
அடையாள அட்டை வழங்க அரசு பஸ் டைம் கீப்பர்கள் கோரிக்கை
அடையாள அட்டை வழங்க அரசு பஸ் டைம் கீப்பர்கள் கோரிக்கை
ADDED : செப் 23, 2025 04:01 AM
தொண்டி: அரசு பஸ் டைம் கீப்பர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்ஸ்டாண்டுகளில் டைம் கீப்பர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்ஸ்டாண்டில் சரியான நேரத்திற்கு பஸ்கள் வருவதையும், புறப்பட்டு செல்வதையும் உறுதி செய்யும் பணிகளில் ஈடுபடுவார்கள். மேலும் பஸ்கள் புறப்படும் நேரம், வரும் நேரம் குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிப்பார்கள். பயணிகளை கூவி அழைத்து பஸ்சில் ஏற வைப்பதும் இவர்களின் பணியாகும்.
குறிப்பிட்ட சில அரசு பஸ்களில் மட்டும் ஒரு தவணைக்கு ரூ.2 சம்பளமாக அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது குறித்து டைம் கீப்பர்கள் கூறியதாவது:
கண்டக்டர்களைப் போல் சீருடை, காலணி மற்றும் மாத சம்பளமாக ரூ.900 வழங்கப்பட்டது. காலப்போக்கில் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. வேலை பார்ப்பதற்கு அடையாள அட்டையும் இல்லை. எனவே தொழிலாளர்கள் நலன் கருதி ஒரு பஸ்சுக்கு ஒரு தவணையாக ரூ.5 வசூல் செய்து கொள்ளவும், அடையாள அட்டை வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வருக்கு சங்கம் சார்பில் மனு அனுப்பியுள்ளோம் என்றனர்.