/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுகாதார வசதிகள் கொண்ட ஓட்டலில் அரசு பஸ் நிறுத்த வலியுறுத்தல்
/
சுகாதார வசதிகள் கொண்ட ஓட்டலில் அரசு பஸ் நிறுத்த வலியுறுத்தல்
சுகாதார வசதிகள் கொண்ட ஓட்டலில் அரசு பஸ் நிறுத்த வலியுறுத்தல்
சுகாதார வசதிகள் கொண்ட ஓட்டலில் அரசு பஸ் நிறுத்த வலியுறுத்தல்
ADDED : ஜூலை 01, 2025 02:35 AM
சாயல்குடி: சுகாதார வசதிகள் உள்ள ஓட்டலில் மட்டுமே அரசு பஸ்களை நிறுத்திட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கிழக்கு கடற்கரை சாலையின் மூலமாக நாகப்பட்டினம் முதல் நாகர்கோவில் வரை வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அரசு போக்குவரத்து கழகத்தில் அங்கீகாரம் பெறாத ஓட்டல்களில் திருநெல்வேலி கோட்டத்தைச் சேர்ந்த அரசு பஸ்கள் நிறுத்துவதால் பஸ் பயணிகளுக்கும் டிரைவர், கண்டக்டருக்கிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது.
இது குறித்து பயணிகள் கூறியதாவது: போக்குவரத்து கழகங்களில் உரிய அரசாணை அனுமதியும் பெறாமல் உள்ள ஓட்டலில் நிறுத்துகின்றனர்.
இதனால் அப்பகுதிகளில் பஸ் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதி இல்லாமலும் உள்ளது. கழிப்பறை வசதியின்றி உள்ளன. அடிப்படை வசதியுள்ள ஓட்டல்களில் அரசு பஸ்சை நிறுத்த வழிவகை செய்ய வேண்டும் என்றனர்.