தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ அரசு பஸ் 'பிரேக் டவுன்' :பாதி வழியில் பயணிகள்

அரசு பஸ் 'பிரேக் டவுன்' :பாதி வழியில் பயணிகள்

அரசு பஸ் 'பிரேக் டவுன்' :பாதி வழியில் பயணிகள்


UPDATED : செப் 26, 2026 04:32 PM

ADDED : செப் 26, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2026 04:32 PM ADDED : செப் 26, 2026 04:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

முதுகுளத்துார்: பரமக்குடியில் இருந்து முதுகுளத்துாருக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பிரேக் டவுன் ஆனதால் பாதி வழியில் இறக்கப்பட்டதால் பயணிகள் சிரமப்பட்டனர்.

முதுகுளத்துாரில் இருந்து பரமக்குடிக்கு அரசு டவுன் பஸ் தினந்தோறும் இயக்கப்படுகிறது. நேற்று பரமக்குடியில் இருந்து முதுகுளத்துாருக்கு காலையில் இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் கீழத்துாவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே பாதி வழியில் பிரேக் டவுன் ஆனது. பயணிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர்.

இதையடுத்து மக்கள் அவ்வழியே வரும் டூவீலர் மற்றும் வாகனங்களை மறித்து லிப்ட் கேட்டு சென்றனர். பாதி வழியில் பிரேக் டவுன் ஆனதால் கிராமத்திற்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். இதனால் அடுத்த பஸ் வரும் வரைக்கும் ரோட்டோரத்தில் காத்திருந்தனர். அரசு பணிமனையில் இருந்து பஸ் இயக்கப்படும் போது முழுமையாக பரிசோதனை செய்து இயக்க வேண்டும்.

பயணிகள் பாதிக்கப்படாத வகையில் பஸ் பிரேக் டவுன் ஏற்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட போக்குவரத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

--

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us