ADDED : ஆக 09, 2025 03:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நஜ்முதீன் முன்னிலை வகித்தார். கொத்தடிமைக் கூலி முறைகளான தொகுப்பூதியம், மதிப்பூதியம், அவுட்சோர்சிங், கான்ட்ராக்ட் பணி நியமனங்களை திரும்பபெற வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்பு காலமுறை ஊதியம் உள்ளிட்ட அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தினர். மாவட்ட துணைத்தலைவர்கள் வேலுச்சாமி, பாலுச்சாமி, வட்டக்கிளை தலைவர் பாரதிராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.