/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு ஊழியர்கள் மனு அளிக்கும் போராட்டம்
/
அரசு ஊழியர்கள் மனு அளிக்கும் போராட்டம்
ADDED : ஜூன் 17, 2025 04:55 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மருத்துவ காப்பீட்டில் உள்ள குறைகளை களைய வேண்டும் என மனு அளிக்கும் போராட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தலைவர் விஜயராம லிங்கம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அப்துல்நஜ்முதீன் முன்னிலை வகித்தார். இதில் மருத்துவ காப்பீடு மூலம் பயன்பெற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடல் நலம் குன்றி மருத்துவ மனைக்குச் சென்றால் அலைகழிக்கப்படுகின்றனர்.
பிரதிமாதம் இத்திட்டத்தில் பணத்தைப் பிடித்துக் கொண்டு அதற்கான சிகிச்சைகள் தர மறுக்கிறார்கள். காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை அரசு களைய வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக மனுவை கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் வழங்கினர்.
மாவட்ட கருவூல அலுவலகத்தில் மனு அளித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பாண்டி, வட்ட துணைத்தலைவர் வேலுச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.