/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு ஊழியர் இரண்டு நாள் சிறு விடுப்பு போராட்டம் வெறிச்சோடிய அலுவலகங்கள்

ADDED : பிப் 01, 2024 07:23 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இரு நாட்கள் சிறு விடுப்பு போராட்டம் நடத்தியதால் நேற்று அரசு அலுவலகங்களில் பணியாளர்களின்றி வெறிச்சோடியதால் வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்பட்டன.
அரசு ஊழியர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி, சத்துணவு, ஊராட்சி செயலர், கிராம உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இரு நாட்கள் சிறு விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதன் காரணமாக நேற்று அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன.
இதன் காரணமாக அலுவலகங்களுக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டது.-----