/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 03, 2025 09:54 PM

ராமநாதபுரம்; ராமநாதபுரத்தில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் ராமேஸ்வரம் ரோட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ., முன்பு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை நிர்வாகம் மற்றும் போலீசாரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சங்க மாவட்ட தலைவர் விஜயராமலிங்கம் தலைமை வகித்தார். இதில் தொழிற்பயிற்சி அலுவலர் சங்கம் சார்பில் துறை நலன், மாணவர்கள் நலன் மற்றும்ஊழியர் நலன் சார்ந்த 23 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பலமுறை முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் இயக்குனர் முறையான பேச்சுவார்த்தை நடத்தாமல் சங்க நிர்வாகிகளை அவமானப்படுத்தும் விதமாக நடந்து கொள்வதையும், மாநில பொருளாளர் திருநாவுக்கரசுவை தாக்கிய போலீசாரை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட துணைத்தலைவர்கள் வேலுச்சாமி, மெய்யசக்தி, ராமநாதபுரம் வட்டக்கிளை தலைவர் பாரதிராஜா, ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க தலைவர் சண்முகராஜ், பொருளாளர் சாருமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.