/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரசு மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி; உயர்நீதிமன்றம் கெடு
/
அரசு மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி; உயர்நீதிமன்றம் கெடு
அரசு மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி; உயர்நீதிமன்றம் கெடு
அரசு மருத்துவமனை கட்டடம் கட்டும் பணி; உயர்நீதிமன்றம் கெடு
ADDED : மார் 14, 2024 11:19 PM
மதுரை : தொண்டி கலந்தர் ஆசிக் அகமது உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவாக 2018 ல் அறிவிக்கப்பட்டது. இதன்படி இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்தவில்லை. மருத்துவமனை கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
ஆபத்தான கட்டடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டடம் கட்ட சுகாதாரத்துறை செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
தமிழக அரசு தரப்பில், பழைய கட்டடம் அகற்றப்பட்டுள்ளது. தற்போது புதிய கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கட்டுமானத்திற்கு போதிய நிதி ஒதுக்கி பணிகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.