/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்தடை நேரத்தில் இருளில் மூழ்குகிறது அரசு மருத்துவமனை: அமைச்சர் தொகுதியில் அவலம்
/
மின்தடை நேரத்தில் இருளில் மூழ்குகிறது அரசு மருத்துவமனை: அமைச்சர் தொகுதியில் அவலம்
மின்தடை நேரத்தில் இருளில் மூழ்குகிறது அரசு மருத்துவமனை: அமைச்சர் தொகுதியில் அவலம்
மின்தடை நேரத்தில் இருளில் மூழ்குகிறது அரசு மருத்துவமனை: அமைச்சர் தொகுதியில் அவலம்
ADDED : செப் 20, 2025 03:43 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்படும் போது இருளில் மூழ்குவதால் அமைச்சர் ராஜகண்ணப்பன் தொகுதியில் இந்த அவல நிலையால் நோயாளிகள், மக்கள் அவதிப்படுகின்றனர்.
முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள், வெளி நோயாளிகள், சித்த மருத்துவம், மகப்பேறு, எக்ஸ்ரே உட்பட தனித்தனி பிரிவாக செயல்பட்டு வருகிறது.
முதுகுளத்துார் அதனை சுற்றியுள்ள காக்கூர், ஏனாதி, இளஞ்செம்பூர், வெண்ணீர்வாய்க்கால், செல்வநாயகபுரம், கீரனுார், ஆத்திகுளம், புளியங்குடி, கீழத்துாவல் உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
முதுகுளத்துார் தாலுகாவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக முதுகுளத்துார் அரசு மருத்துவமனைக்கு நோயாளிகளை அனுப்பி வைக் கின்றனர்.
தற்போது பருவ மழைக்காலம் என்பதால் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முதுகுளத்துார் பகுதியில் அவ்வப்போது மின்தடை ஏற்படுகிறது. அப்போது அரசு மருத்துவமனை இருளில் மூழ்குகிறது. சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொகுதியில் இந்த அவல நிலை உள்ளது. அரசு மருத்துவமனையில் இருக்கும் ஜெனரேட்டரை முறையாக பராமரிப்பு பணி செய்து மின்தடை ஏற்படும் நேரத்தில் ஜெனரேட்டரை இயக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.