ADDED : பிப் 14, 2025 07:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி அருகே செங்கப்படையில் அரசு தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இங்கு மாணவர்களின் வசதிக்காக அதானி கிரீன் எனர்ஜி சார்பில் உணவு கூடத்திற்காக ரூ.8.50 லட்சத்தில் சி.எஸ்.ஆர்., துறை மூலம் புதிதாக கட்டடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடந்தது.
உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரமேஷ் தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு அதிகாரி ஜனார்த்தனன் வரவேற்றார். அதானி குழும தலைமை நிர்வாகி வினோத் திறந்து வைத்தார். வி.ஏ.ஓ., சித்ராதேவி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பிரசன்னா உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் சுதா நன்றி கூறினார்.