/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிக்கலில் வாடகை கட்டடத்தில் அரசுப்பள்ளி மாணவர் விடுதி
/
சிக்கலில் வாடகை கட்டடத்தில் அரசுப்பள்ளி மாணவர் விடுதி
சிக்கலில் வாடகை கட்டடத்தில் அரசுப்பள்ளி மாணவர் விடுதி
சிக்கலில் வாடகை கட்டடத்தில் அரசுப்பள்ளி மாணவர் விடுதி
ADDED : மார் 09, 2024 08:37 AM
சிக்கல் : அமைச்சர் ராஜகண்ணப்பனின் முதுகுளத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சிக்கல் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி சேதமடைந்துள்ளதால் வாடகை கட்டடத்தில் செயல்படுகிறது. விடுதியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக 1999ல் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி கட்டப்பட்டது. சிக்கல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இருந்த அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி சேதமடைந்தது.இதனால் 50 மாணவர்கள் சிக்கல் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதிக்கு அருகே தனியார் வாடகை கட்டடத்தில் 50 மாணவர்கள் தங்கியுள்ளனர்.
இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக 2021க்கு பிறகு சேதமடைந்த ஆதிதிராவிடர் அரசு மாணவர் விடுதி கட்டடம் அகற்றப்பட்டது. அதன் பிறகு கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வென்ற முதுகுளத்துார் தொகுதிக்கு உட்பட்ட இப்பகுதியில் மாணவர் விடுதிகளுக்கான கட்டடங்களை ஆய்வு செய்து புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை வேண்டும். பொட்டல்பச்சேரி விவசாயி ஸ்டாலின் கூறியதாவது:
சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பிற்படுத்தப்பட்டோர் மாணவர் நல விடுதி சேதமடைந்த நிலையில் செயல்படுகிறது.
சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்துள்ளது.கட்டடம் மராமத்து பணிகள் செய்யப்படாமல் உள்ளது. இதன் அருகே அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி தனியார் கட்டடத்தில் செயல்படுகிறது.
எனவே அமைச்சர் ராஜகண்ணப்பன் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

