/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில ஜூடோ போட்டியில் அரசு பள்ளி மாணவி 2-ம் இடம்
/
மாநில ஜூடோ போட்டியில் அரசு பள்ளி மாணவி 2-ம் இடம்
ADDED : ஆக 06, 2025 08:51 AM

கமுதி : கமுதி அருகே செங்கப்படை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி நிவேதாஸ்ரீ மாநில அளவிலான ஜூடோ போட்டியில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார்.
கமுதி அருகே செங்கப்படை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி நிவேதாஸ்ரீ 7ம் வகுப்பு படிக்கிறார். மாவட்ட அளவில் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று திருவண்ணாமலையில் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்றார். இதில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
வயதின் அடிப்படையில் தனித்தனி பிரிவுகளாக போட்டி நடந்தது. முடிவில் நிவேதாஸ்ரீ மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் கமலஹாசன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் மாணவி நிவேதாஸ்ரீயை பாராட்டினர்.