/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,யில் படிக்க அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு
/
ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,யில் படிக்க அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு
ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,யில் படிக்க அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு
ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,யில் படிக்க அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு
ADDED : ஜூன் 19, 2025 11:47 PM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன்முறையாக அரசுபள்ளிகளில் படிக்கும் இரண்டு மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,யில் சேர்வதற்கு தேர்வாகியுள்ளனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்த பிறகு ஜே.இ.இ., மற்றும் நீட் தேர்வுக்காக அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒரு மாதம் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டது.
இதன்படி ஜே.இ.இ., எனப்படும் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் ஆர்.காவனுர் மேல்நிலைப்பள்ளி மாணவி சுருதி சென்னை ஐ.ஐ.டி.,யில் பி.டெக் உலோகவியல் (மெட்டலாஜி) மற்றும் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங் படிக்க தேர்வாகி உள்ளார்.
மேலும் ராமேஸ்வரம்அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் விக்னேஷ் தெலுங்கானா மாநிலம் வாரங்கல் என்.ஐ.டி.,யில் சிவில் இன்ஜினியரிங் படிப்பதற்கு தேர்வாகியுள்ளார். மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள சுருதி, விக்னேஷ் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வாழ்த்து தெரிவித்தார்.
முதன்மை கல்வி அலுவலர் (பொ) பிரின்ஸ் ஆரோக்கிராஜ், ராமேஸ்வரம் பள்ளி தலைமை யாசிரியர் கணேசபாண்டி மற்றும் பெற்றோர், ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர்.