/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தள்ளுவண்டி மாடலாக மாறிய அரசு டவுன் பஸ்
/
தள்ளுவண்டி மாடலாக மாறிய அரசு டவுன் பஸ்
ADDED : ஜூன் 23, 2025 11:37 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் இருந்து கமுதிக்கு இயக்கப்பட்ட 11ம் எண் அரசு டவுன் பஸ் பஸ் ஸ்டாண்டில் பிரேக் டவுன் ஆனதால் மக்கள் உதவியுடன் தள்ளிவிடப்பட்டு இயக்கப்பட்டது. முதுகுளத்துாரில் இருந்து கமுதி, மேலபனையூர், சாயல்குடிக்கு 11ம் எண் அரசு டவுன் பஸ் தினந்தோறும் சுழற்சி முறையில் இயக்கப்படுகிறது.
நேற்று முதுகுளத்துாரில் இருந்து கமுதிக்கு காலை 11:00 மணிக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் பஸ் ஸ்டாண்டில் பிரேக் டவுன் ஆனது. இதையடுத்து அங்கு இருந்த மக் களின் உதவியுடன் பஸ் தள்ளிவிடப்பட்டு இயக்கப்பட்டது.
இதேபோல் நடுவழியில் பிரேக் டவுன் ஆனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அரசு பஸ் பணிமனையில் இருந்து இயக்கப்படும் போதே முழுமையாக பரிசோதனை செய்து அதிகாரிகள் இயக்க வேண்டும். பழுதான டவுன் பஸ்களை பணிமனையில் ஒப்படைத்து விட்டு புதிய பஸ்கள் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.