/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோடு சேதத்தால் பள்ளத்தில் இறங்கியது அரசு டவுன் பஸ்
/
ரோடு சேதத்தால் பள்ளத்தில் இறங்கியது அரசு டவுன் பஸ்
ரோடு சேதத்தால் பள்ளத்தில் இறங்கியது அரசு டவுன் பஸ்
ரோடு சேதத்தால் பள்ளத்தில் இறங்கியது அரசு டவுன் பஸ்
ADDED : டிச 24, 2024 04:31 AM

ரெகுநாதபுரம்: சேதமடைந்த ரோட்டில் ரோட்டோர பள்ளத்தில் அரசு டவுன் பஸ்
இறங்கியது.
ரெகுநாதபுரத்தில் இருந்து மேலுார் கிராமத்திற்கு 26ம் நம்பர் அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. ராமநாதபுரத்தில் இருந்து பருத்திக்காட்டு வலசை வழியாக ரெகுநாதபுரம் மேலுார் வரை
செல்லும் ரோட்டில்
நேற்று காலை 11:00 மணிக்கு சென்ற பஸ் ரோட்டோர பள்ளத்தில் இறங்கியது.
பஸ்சில் இருந்த 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக இறக்கி விடப்பட்டு மாற்று பஸ்சில் வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொதுமக்கள் கூறியதாவது: ரெகுநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலுார் ரோடு 1 கி.மீ.,க்கு குண்டும் குழியுமாக உள்ளது. ரோடு அமைத்து 15 ஆண்டுகள் ஆகிவிட்டதால் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில்
உள்ளது.
ரோடு அமைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு தயாராக உள்ள நிலையில் விரைந்து முடிக்க வேண்டும்.
எனவே திருப்புல்லாணி யூனியன் நிர்வாக அதிகாரிகள் புதிய ரோடு அமைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்றனர்.