/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு டவுன் பஸ்களால் மாற்று பஸ்சிற்காக காத்திருந்து பயணிகள் அவதி

ADDED : ஏப் 29, 2024 11:59 PM

ராமநாதபுரம் நகர் மட்டுமின்றி, கிராமங்களிலிருந்து அலுவலர்கள், கல்லுாரி, பள்ளி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் என ஏராளமானவர்கள் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்கின்றனர். குறிப்பாக இலவச கட்டணம் என்பதால் கிராமப்புறங்களை சேர்ந்த பெண்கள் டவுன் பஸ்சில் பயணம் செய்வது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் போதிய பராமரிப்பு இல்லாத ஓட்டை, உடைசல் பழைய பஸ்கள் நகர், கிராமப்பகுதிகளுக்கு இயக்கப்படுகிறது. இவற்றில் இருக்கைகள் கண்டபடி சேதம் அடைந்துள்ளன. நிற்கும் பயணிகள் மேலே கம்பிகளை பிடிக்க முடியாதபடி கூரையோடு ஒட்டியுள்ன.
பல பஸ்களின் படிக்கட்டுகள் சேதமடைந்துஉள்ளன. மேலும் அவ்வப்போது படிக்கட்டுகள் உடைந்து விழுகின்றன. டிப்போவில் முரைறயான பராமரிப்பு பணிகள் செய்யாததால் நடுரோட்டில் பஞ்ராவது, பழுதாகி நின்றுவிடுவது அடிக்கடி நடப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நேற்று காலை தாமரைக்குளத்தில் இருந்து அரண்மனை நோக்கி சென்ற டவுன் பஸ் (எண்:27) ராமேஸ்வரம் ரோடு குயவன்குடி அருகே பழுதாகி நின்றுவிட்டது. இதனால் பயணிகள் இறக்கி விடப்பட்டு மாற்று பஸ் வரும் வரை காத்திருந்து சிரமப்பட்டனர்.
இது போன்ற சம்பவங்கள் மாவட்டத்தில் அடிக்கடி நடக்கிறது. இவற்றை ஏனோ அதிகாரிகள் கண்டும்காணாததுபோல உள்ளனர்.
போக்குவரத்து பணிமனையில் இருந்து பஸ் ஸ்டாண்டிற்கு புறப்படும் போதே பஸ்சை ஆய்வு செய்து, குறைகள் இல்லாததை உறுதி செய்ய வேண்டும்.
குறிப்பாக பழைய பஸ்களின் தரத்தை உறுதி செய்து இயக்க வேண்டும். அதற்கு அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் உத்தரவிட வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.