/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பேரூராட்சியுடன் ஊராட்சி இணைப்புதிட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தல்
/
பேரூராட்சியுடன் ஊராட்சி இணைப்புதிட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தல்
பேரூராட்சியுடன் ஊராட்சி இணைப்புதிட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தல்
பேரூராட்சியுடன் ஊராட்சி இணைப்புதிட்டத்தை அரசு கைவிட வலியுறுத்தல்
ADDED : டிச 22, 2024 02:13 AM
ராமநாதபுரம்:தமிழகத்தில் பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளை இணைப்பதால் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் அத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என ஊரக வளர்ச்சிதுறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் செல்வக்குமார்தெரிவித்தார்.
ராமநாதபுரம்மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் வட்டக்கிளை மாநாடு நடந்தது.இதில் பங்கேற்ற செல்வக்குமார் கூறியதாவது:
ராமநாதபுரத்தில் 2025 பிப்.,ல் 11வது மாநிலமாநாடு நடைபெற உள்ளது. இதில் கோரிக்கைகள்,அது தொடர்பான போராட்டங்கள் குறித்து முடிவு செய்யப்படும்.குறிப்பாக உள்ளாட்சித்துறை உருவாக்கப்பட்டு ஊராட்சி மற்றும்ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வலியுறுத்திபோராடியும் அரசு கண்டுகொள்ளவில்லை.
பேரூராட்சிகளுடன் ஊராட்சிகள் இணைக்கப்படும் போது கிராமப்புற மக்களின்நுாறு நாள் வேலைத்திட்டம், பல்வேறு சலுகைகள்பறிக்கப்படுகிறது. எனவே அத்திட்டத்தை அரசு கைவிடவேண்டும்.கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு புதிய ஊழியர்கள்கட்டமைப்பு இல்லை.
லட்சக்கணக்கான வீடுகளை கண்காணிப்பது சிரமம். தனி ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். விடுமுறை நாளில், இரவு நேரத்தில் ஆய்வுகூட்டங்களால் ஊழியர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதால் இதை தடுக்க வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றாத அரசை கண்டித்து மாநில அளவில் 2025ஜன.,7 ல் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்.
அதன் பிறகும் நடவடிக்கை இல்லை என்றால்மாநில மாநாட்டில் அடுத்தக்கட்ட போராட்டங்கள் குறித்துமுடிவு செய்யப்படும் என்றார்.