/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்டுப்பன்றிகளை சுடும் உத்தரவை அரசு அமல்படுத்த வலியுறுத்தல்
/
காட்டுப்பன்றிகளை சுடும் உத்தரவை அரசு அமல்படுத்த வலியுறுத்தல்
காட்டுப்பன்றிகளை சுடும் உத்தரவை அரசு அமல்படுத்த வலியுறுத்தல்
காட்டுப்பன்றிகளை சுடும் உத்தரவை அரசு அமல்படுத்த வலியுறுத்தல்
ADDED : நவ 05, 2025 03:28 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் காட்டுப்பன்றிகளால் விவசாயம் பாதிக்கப்படுவதால் அவற்றை சுடும் உத்தரவை தமிழக அரசு அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மாவட்டத்தில் பரமக்குடி, கமுதி, முதுகுளத்துார் தாலுகாக்களில் காட்டுப்பன்றிகள், மான்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக அதிகரித்துள்ள காட்டுப்பன்றிகள் விளைபயிர்களை அழிப்பதுடன், விளை நிலங்களுக்குச் செல்லும் விவசாயிகளை தாக்கி காயப்படுத்துகின்றன. ஆண்டு தோறும் பல ஆயிரம் ஏக்கர் புன்செய் நிலங்களில் நடக்கும் நெல், பருத்தி, எள், சோளம், பயறு வகைகள், கடலை சாகுபடி பாதிக்கப்படுகிறது.
இதுகுறித்து ராமநாதபுரத்தில் காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் மலைச்சாமி கூறியதாவது: நடப்பாண்டிற்குரிய நெல், மிளகாய் சாகுபடி பணிகள் துவங்கியுள்ளன.
வயல் வெளியில் திரியும் காட்டுப்பன்றிகளால் விவசாயம் அழிந்து வருகிறது.
மனிதர்களும் அவைகளால் தாக்கப்படுகின்றனர். ராமநாதபுரத்தில் காடு, மலைகள் இல்லை.
இங்கு திரிவது காட்டுபன்றிகளா என்ற சந்தேகமும் உள்ளது என வனத்துறையினர் கூறுகின்றனர்.
சாயல்குடியில் காட்டுபன்றிகளை விரட்டியவர்களை வனத்துறை எச்சரித்துள்ளது ஏன்.
பயிர் பாதிப்பு, நிவாரணம் வழங்குவது குறித்து வனத்துறையினர், மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகின்றனர். நடப்பு ஆண்டில் பயிர்கள், விவசாயிகளை பாதுகாக்க கேரள அரசு போன்று காட்டு பன்றிகளை சுடும் உத்தரவை தமிழக அரசு அமல்பத்த வேண்டும் என்றார்.

