/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தமிழகம் முழுவதும் 15,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
/
தமிழகம் முழுவதும் 15,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் 15,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் 15,000 செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : ஏப் 19, 2025 12:50 AM

ராமநாதபுரம்:தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் 15 ஆயிரம் செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில துணைத்தலைவர் வினோதினி கூறியதாவது:
மருத்துவப் பணிகள் ஆட்சேர்ப்பு வாரியம் மூலம் தேர்வு வைத்து தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள் 15 ஆயிரம் பேர் பணியாற்றுகின்றோம். பணியில் சேரும் போது ரூ.7500 சம்பளம் வழங்கப்பட்டது. 2014 ல் போராட்டத்திற்கு பின் ரூ.14 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. 2021 ல் ரூ.18 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது.
இவர்களை பணி நிரந்தரம் செய்தால் ரூ.54 ஆயிரம் வரை கிடைக்கும். எம்.ஆர்.பி., செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்புக்கான ஊதியம் வழங்கப்படுவதில்லை. இதனை வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொகுப்பூதிய செவிலியர்களை மட்டுமே கொண்டு இயங்கும் இடத்தில் நிரந்தர செவிலியர், கண்காணிப்பாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் 12 முதல் 24 மணி நேரம் வரை பணி செய்யும் செவிலியர்களுக்கு பணி நேரத்தை உறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசு மருத்துவமனைகளில் உள்ளது போல் செவிலியர் பதவியின் பெயரை செவிலிய அலுவலர் என மாற்றம் செய்ய வேண்டும். புதிதாக துவக்கப்பட்ட 11 அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகளில் செவிலியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
கொரோனா காலங்களில் பணிபுரிந்து நீக்கம் செய்யப்பட்டவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஏப்.,26 ல் சென்னையில் நடக்கவுள்ள மாநில கூட்டத்தில் போராட்டங்கள் குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. இவ்வாறு கூறினார்.