/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
குடியிருப்பு பகுதியில் 3 மணி நேரமாக நின்ற அரசு வாகனம்: மக்கள் குழப்பம்
/
குடியிருப்பு பகுதியில் 3 மணி நேரமாக நின்ற அரசு வாகனம்: மக்கள் குழப்பம்
குடியிருப்பு பகுதியில் 3 மணி நேரமாக நின்ற அரசு வாகனம்: மக்கள் குழப்பம்
குடியிருப்பு பகுதியில் 3 மணி நேரமாக நின்ற அரசு வாகனம்: மக்கள் குழப்பம்
ADDED : ஏப் 16, 2025 10:36 PM
திருவாடானை: குடியிருப்பு பகுதியில் இரவில் மூன்று மணி நேரமாக நின்ற அரசு வாகனத்தை பார்த்து மக்கள் குழப்பம் அடைந்தனர்.
திருவாடானை மேல ரதவீதியில் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த வழியாக செல்லும் ரோட்டோரத்தில் நேற்று முன்தினம் மாலை 6:00 முதல் 9:00 மணி வரை தமிழ்நாடு அரசு என்ற வாகனம் நின்றது. வாகனத்திற்குள் யாரும் இல்லை. நீண்ட நேரமாக நின்றதால் அப்பகுதி மக்கள் குழப்பம் அடைந்து போலீசுக்கு தெரிவித்தனர்.
திருவாடானை போலீசார் சென்று வாகனத்தை சோதனை செய்தனர். அதில் போக்குவரத்துத்துறைக்கு சொந்தமான வாகனம் என தெரிய வந்தது. அதனை தொடர்ந்து போலீசார் அலுவலர்களிடம் தொடர்பு கொண்டவுடன் வாகனத்தை டிரைவர் ஓட்டிச் சென்றார். விசாரணையில் தெரியவந்ததாவது:
அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணியின் போது அலைபேசி பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என அரசு அறிவித்துள்ளது. இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் செக்கிங் இன்ஸ்பெக்டர்கள் இடம் பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இச் சோதனை நடந்து வருகிறது.
டிரைவர், கண்டக்டர்களுக்கு தெரியாமல் இருப்பதற்காக ஒதுக்குபுறமான இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு போக்குவரத்துதுறை அலுவலர்கள் இச்சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே இந்த வாகனம் அதே போல் நிறுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிந்தது.