/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தால் அரசுக்கு ரூ.35 ஆயிரம் கோடி கிடைக்கும்:சொல்கிறார் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க நிர்வாகி

ADDED : பிப் 16, 2024 02:04 AM
வேடசந்துார்:''தமிழக அரசு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தினால் அரசுக்கு ரூ.35 ஆயிரம் கோடி உபரி நிதி கிடைக்கும்'' என, சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தெரிவித்தார்.
வேடசந்துாரில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் 1.4.2003 க்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் நடைமுறையில் உள்ளது. திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம், அகவிலைப்படியில் பத்து சதவீதம் தொகை பிடித்தம் செய்யப் படுகிறது. அதற்கு சமமான தொகையை மாநில அரசின் பங்களிப்பு தொகையாக செலுத்துகிறது.
இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையுடன் அரசு தொகையும் சேர்த்து ரூ. 70 ஆயிரம் கோடி கையிருப்பு உள்ளது. தொகை எங்கே உள்ளது என்பது தனிக்கதை.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வதன் மூலம் அரசின் பங்களிப்பு தொகையாக உள்ள ரூ. 35 ஆயிரம் கோடி நிதியை அரசு எடுத்துக் கொள்ளலாம். இதற்காக மத்திய அரசு அனுமதியோ, ரிசர்வ் வங்கி, ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடமோ அனுமதி பெற தேவையில்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து மூலமாக மாதம் தோறும் ரூ.600 கோடி அரசுக்கு செலவு குறையும். ( 10 சதவீத அரசின் பங்களிப்பு, 7.1 சதவீத வட்டியும் மிச்சம் )
இதை எடுத்துச் சொன்னால் அதிகாரிகளுக்கு சரியாக புரியவில்லை. இதனால் தான் இந்தத் திட்டம் இன்னும் மாற்றத்திற்கு வரவில்லை. ராஜஸ்தான், சட்டீஸ்கர் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழக அரசும் தேர்தல் வாக்குறுதிப்படி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். இதற்காகத்தான் தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறோம். இன்று (பிப். 16 ) தமிழக முதல்வரின் வீட்டை முற்றுகையிட உள்ளோம் என்றார்.
இந்நிலையில் முற்றுகை போராட்டத்தை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிரடெரிக் ஏங்கல்ஸ் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.