தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பிளஸ் 2 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

 பிளஸ் 2 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்

 பிளஸ் 2 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவ பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்


ADDED : மார் 06, 2026 06:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 06:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: பொதுத்தேர்வில் பிளஸ் 2 மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவிட முதுகலை ஆசிரியர்களை தவிர்த்து பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. இதில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவிட கல்லுாரி மாணவர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டது. எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து ஆசிரியர்களை பயன்படுத்த அனுமதித்தனர்.

கல்வித்துறையினர் கூறியதாவது: மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பிளஸ் 2 தேர்வு எழுத உதவிட முதுகலை ஆசிரியர்களை பயன்படுத்தாமல் அரசு, தனியார் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும். மாணவர் படிக்கும் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் அந்த மாணவருக்கு உதவி ஆசிரியராக நியமிக்ககூடாது. ஒரு மாணவருக்கு அனைத்து தேர்விலும் ஒரே ஆசிரியர் உதவிடாமல் ஒவ்வொரு தேர்விற்கும் வெவ்வேறு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும். இதே போல் 10ம் வகுப்பு தேர்விற்கு 6 முதல் 8ம் வகுப்பு பாடம் எடுக்கும் ஆசிரியர்களை பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் கூறுவதை மட்டும் எழுத ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us