/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பதவி உயர்வு அரசாணையை அரசு ரத்து செய்ய கூடாது பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை

ADDED : செப் 25, 2024 01:50 AM

ராமநாதபுரம்:'நடுநிலைப்பள்ளிகளில் 19 ஆண்டுகளாக பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி உள்ளனர். புதிய பதவி உயர்வு அரசாணை 243 ஐ அரசு ரத்து செய்யக்கூடாது,' என, தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில நிறுவனத் தலைவர் ஜி.கிருஷ்ணன் கூறியதாவது:
தமிழகத்தில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று புதிய அரசாணை 243 அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு 243 அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்துகின்றனர்.
அவர்களது கோரிக்கையை ஏற்றால் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வின்றி பாதிக்கப்படுவார்கள்.எனவே புதிய அரசாணை 243 ன் படி நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஒய்வூதியத்திட்டத்தை அரசு உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றார்.