ADDED : பிப் 10, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி டாக்டர் அப்துல் கலாம் பப்ளிக் பள்ளியில் 8 வது ஆண்டு மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
பள்ளி தலைவர் முகைதீன் முசாபர் அலி தலைமை வகித்தார். டாக்டர் ஜாபர் சாதிக், வக்கீல் கமால் பங்கேற்று மழலையருக்கு பட்டங்களை வழங்கினர். அப்போது குழந்தைகள் பாடல், கதை, கவிதை, யோகா உள்ளிட்ட திறமைகளை வெளிப்படுத்தினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.