ADDED : மார் 31, 2026 06:10 PM

அ நிறம் | அளவு
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் யூ.கே.ஜி., முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. தாளாளர் கோகிலா தலைமை வகித்தார். நிர்வாக ஆலோசகர் ஜேக்கப் முன்னிலை வகித்தார். முதல்வர் பிரீத்தா ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு விருந்தினராக எஸ்தர் வேணி மற்றும் மணிவண்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கி பேசினர்.
மாணவர்களின் நடன நாட்டியம், குழு நடனம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. மாணவர்களுடன் இணைந்து பெற்றோரும் நடனமாடினர். துணை முதல்வர் முத்துக்கண்ணு நன்றி கூறினார்.
