/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆக.15 ல் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
/
ஆக.15 ல் ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
ADDED : ஆக 11, 2025 10:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 47 ஊராட்சிகளில் ஆக.,15 ல் காலை 11:00 மணிக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டங்கள் நடக்கிறது.
இதில் ஊராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அண்ணாமறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் திட்டம் போன்ற பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் இக் கூட்டங்களில் கலந்து கொண்டு கருத்துகளை தெரிவிக்கலாம் என வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) ஆரோக்கிய மேரிசாராள் தெரிவித்தார்.