/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊராட்சிகளில் ஜன.26ல் கிராம சபை கூட்டம்
/
ஊராட்சிகளில் ஜன.26ல் கிராம சபை கூட்டம்
ADDED : ஜன 12, 2025 05:16 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் ஜன.26ல் குடியரசு தினத்தில் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது:
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி குடியரசு தினத்தன்று கிராம ஊராட்சிகளில் கிராம சபைக் கூட்டம் நடத்த வேண்டும். இதன்படி ஜன.26ல் காலை 11:00 மணிக்கு மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்தவேண்டும்.
இதில் ஊராட்சி நிர்வாகம், கிராம வளர்ச்சித்திட்டங்கள் குறித்து விவாதித்திட வேண்டும். பொதுமக்கள் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்யவேண்டும் என்றார்.