ADDED : அக் 28, 2025 03:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை: ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு நவ.,1ல் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும். இது குறித்து திருவாடானை பி.டி.ஓ. (ஊராட்சி) ஆரோக்கியமேரிசாராள் கூறியதாவது:
நவ.,1 காலை 11:00 மணிக்கு அனைத்து கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் மழை நீர் சேகரிப்பு, கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, துாய்மை பாரத இயக்க திட்டம் குறித்து கலந்தாய்வு நடைபெறும். பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்றார்.

