ADDED : நவ 13, 2024 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை ஊராட்சி ஒன்றிய ஊராட்சிகளில் நவ.23 ல் கிராம சபை கூட்டம் நடக்கிறது.
கிராமங்களில் குடியரசு தினம், மே தினம், காந்தி ஜெயந்தி, சர்வதேச தண்ணீர் தினம், சுதந்திர தினம் மற்றும் உள்ளாட்சி தினங்களில் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.
நவ.1 ல் உள்ளாட்சி தினத்தையொட்டி நடக்க இருந்த கூட்டம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்தி வைக்கப்பட்டது. இக்கூட்டம் நவ.23 ல் நடத்தப்படுகிறது. திருவாடானை ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நவ.23 காலை 11:00 மணிக்கு கூட்டம் நடைபெறும். பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.