நுாறு நாள் வேலை திட்டம் அமல்படுத்த கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம்
நுாறு நாள் வேலை திட்டம் அமல்படுத்த கிராம சபைக்கூட்டத்தில் தீர்மானம்
ADDED : ஜன 28, 2026 05:27 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஆர்.காவனுாரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் நுாறு நாள் வேலைத்திட்டத்தை மீண்டும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் என்ற பெயரில் அமல்படுத்த காங்., கட்சியினர் வலியுறுத்தியதால் அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகம் முழுவதும் காங்., சார்பில் கிராமசபை கூட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என முன்மொழிந்துள்ளனர். அதன்படி ராமநாதபுரம் அருகே ஆர்.காவனுாரில் நடந்த கிராமசபை கூட்டத்தில் காங்., மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன் நுாறு நாள் வேலைத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வலியுறுத்தி தீர்மானத்தை கொண்டு வந்து முன்மொழிந்தார். அதன் பேரில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின் ராஜாராம் பாண்டியன் கூறுகையில், மத்திய அரசு ஏழ்மையை போக்குவதற்கு பதிலாக ஏழைகளை அழிக்கும் நோக்கில் நுாறு நாள் வேலைத் திட்டத்தை மாற்றியுள்ளது. இதனால் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றார்.
