/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தாத்தா பாட்டி தினம் கொண்டாட்டம்
/
தாத்தா பாட்டி தினம் கொண்டாட்டம்
ADDED : பிப் 17, 2024 04:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது.
பள்ளிக் குழந்தைகள் தங்களுடைய தாத்தா மற்றும் பாட்டிக்கு பாத பூஜைகள் செய்து ஆசீர்வாதம் பெற்றனர். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களின் தாத்தா, பாட்டிகளும் தங்களுடைய பேரக்குழந்தைகளுடன் நடந்த விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று தாத்தா பாட்டிகளுக்கு, பள்ளி தாளாளர் கோகிலா, நிர்வாக ஆலோசகர் ஜேக்கப், முதல்வர் பிரீத்தா மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.