ADDED : ஜூலை 30, 2025 11:17 PM
ராமநாதபுரம்; கிறிஸ்துவ தேவாலயங்களை புனரைமைப்பதற்கான மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசு சார்பில் சொந்தக் கட்டடங்களில் இயங்கி வரும் கிறிஸ்துவ தேவாலயங்களை பழுது பார்த்தல், புனரமைத்தல் பணிக்கு மானியம் வழங்கப்படுகிறது.
கட்டடத்தின் வயது 10 முதல் 15 ஆண்டுகள் எனில் ரூ.10 லட்சம், 15 முதல் 20 ஆண்டுகள் எனில் ரூ.15 லட்சம், 20 ஆண்டுகளுக்கு மேல் இருந்தால் ரூ.20 லட்சம் வழங்கப்படும்.
மானியத்தில் இருந்து தேவாலய பீடம், சுவி ஷேசம் வாசிக்கும் ஸ்டாண்ட், நற்கருணை பேழை பீடம், திருப் பலிக்கு தேவையான கதிர் பாத்திரங்கள், சுரூபங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்ட், வழிபடும் மேஜைகள், கழிப்பறை, குடிநீர், சுற்றுச் சுவர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தலாம்.
இதற்கு விண்ணப்பிக்க தேவாலயங்கள் சொந்த கட்டடத்தில் இயங்கி யிருக்க வேண்டும். வெளிநாட்டிலிருந்து எவ்வித நிதி உதவியும் வாங்கியிருக்க கூடாது. மானியத் தொகை வழங்கிய பின் 5 ஆண்டுகளுக்கு மானியம் கோரி விண்ணப்பிக்க முடியாது.
கூடுதல் தகவல்களுக்கு கலெக்டர் அலுவக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

