/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் சாலையில் சிதறிய ஜல்லி; அகற்றிய டிராபிக் எஸ்.ஐ.,க்கு பாராட்டு

ADDED : ஜூலை 08, 2025 10:36 PM

ராமநாதபுரம்; விபத்தை ஏற்படுத்தும் வகையில் ராமநாதபுரத்தில் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டிக் கிடந்த ஜல்லி கற்களை போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., அகற்றியதால் பலரும் அவரை பாராட்டினர்.
ராமநாதபுரத்தில் போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., யாக பணிபுரிபவர் விக்னேஸ்வரன் 34. இவர் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதித்து சாலை விதிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமநாதபுரம் மாவட்ட நுாலகம் அருகில் டிராக்டரில் ஏற்றிச் சென்ற ஜல்லி கற்கள் சரிந்து தேசிய நெடுஞ்சாலையில் குவிந்து கிடந்தது. இதனால் வாகனங்கள் திணறியபடி சென்றன. மேலும் டூவீலரில் சென்றவர்கள் இடறி விழுந்தனர்.
அப்போது அவ்வழியாக சென்ற எஸ்.ஐ., விக்னேஸ்வரன் சாலையில் கிடந்த ஜல்லிக் கற்களை துடைப்பான் மூலம் அகற்றி சாலையை சரி செய்தார். துாசி என்று பாராமல் மனித நேயத்துடன் 20 நிமிடம் தனி நபராக எஸ்.ஐ., கற்களை அகற்றும் வீடியோ தற்போது பரவி வருகிறது. இதனைக் கண்ட ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ், சமூக ஆர்வலர்கள் பலரும் எஸ்.ஐ.,க்கு பாராட்டு தெரிவித்தனர்.